தன்னை கவுரவப்படுத்திய அபுதாபி அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் மற்றும் தமிழ் நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அபுதாபி அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தனக்கு விருது வழங்கி கவுரப்படுத்திய அபுதாபி அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், அப்பகுதியில் உள்ள பிரமாண்ட மசூதியையும் பார்வையிட்டார்....

X

Thanthi TV
www.thanthitv.com