"பிறந்த நாளில் போயஸ் கார்டனுக்கு யாரும் வரவேண்டாம்" - ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி வேண்டுகோள்

பெங்களூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த, தனது பிறந்த நாளில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு யாரும் வர வேண்டாம் என கோரியுள்ளார்.
"பிறந்த நாளில் போயஸ் கார்டனுக்கு யாரும் வரவேண்டாம்" - ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி வேண்டுகோள்
Published on

பெங்களூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த, தனது பிறந்த நாளில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு யாரும் வர வேண்டாம் என கோரியுள்ளார். டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் வருகிறது. இயல்பாகவே, ரஜினியின் மீது அன்பு கொண்ட ரசிகர்கள், சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டு விடுவார்கள். தற்போது, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக வேறு அறிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது பிறந்த நாளில், யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com