'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி
தமிழ் சினிமாவுல இந்த வருஷம் வெளியானதுல ONE OF BEST படம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை சிலாகிச்சிட்டு வராங்க.
சினிமா வட்டாரத்தை கடந்து குடும்பம் குடும்பமா இந்த படத்தை கொண்டாடிட்டு வர, இப்ப பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிட்டாரு.
மிக மிக அற்புதமான படம்னு புகழ்ந்திருக்க ராஜமவுலி, மிகவும் உணர்வுப்பூர்வமா இருந்ததோட, வயிறு வலிக்குற அளவுக்கு சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை மிகுந்த படம்னு பாராட்டியிருக்காரு.
ஆரம்பச்சிதுல இருந்து முடியுற வர ரொம்ப ஆர்வத்துடன் படத்தை பார்த்ததா சுட்டிக்காட்டிய ராஜமவுலி, செம்ம சூப்பரான ரைட்டிங்னு இயக்குநர் அபிசன் ஜீவிந்த்-அ புகழ்ந்திருக்காரு.
இதுமட்டுமில்ல, கடந்த சில வருஷத்துல வெளியான படங்கள்ல, மிகச்சிறந்த படம்னு ராஜமவுலி மிகப்பெரிய CERTIFICATE கொடுத்துட்டாரு.
இதை பார்த்து நெகிழ்ந்த படத்தோட தயாரிப்பாளர் யுவராஜ், இது எங்களுக்கு மில்லியன் டாலர் MOMENT-னு நெகிழ்ந்திருக்கு.
ராஜமவுலியோட பாராட்டு, ஆச்சரியப்படுத்தியதோட, இந்த நாளை ரொம்ப ஸ்பெஷலா மாத்திட்டதா இயக்குநர் அபிஷன் நெகிழ்ந்திருக்காரு.
இதேபோல நடிகை சிம்ரனும் ராஜமவுலியோட வாழ்த்து பெருமகிழ்ச்சியை கொடுத்ததா நெகிழ்ந்திருக்காங்க..
ராஜமவுலி மட்டுமில்ல, ஏராளமான ரசிகர்கள் நாளுக்குநாள் படத்தை புகழ்ந்து வீடியோ மூலமா வாழ்த்திட்டு வராங்க.
