அரசியலில் ராகவா லாரன்ஸ் ? | Raghava Lawrence | Tractor | Thanthitv

அறக்கட்டளையின் வாயிலாக உதவி செய்வது முழுக்க முழுக்க சேவை மட்டுமே என்றும், அரசியலுக்காக செய்யவில்லை என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் சேவையை நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கடகம்பாடி பகுதியில், விவசாயிகளுக்கு டிராக்டரை அர்ப்பணிப்பதற்காக சென்றார். அங்கு பொதுமக்களும், இளைஞர்களும் ராகவா லாரன்சுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளுக்கான டிராக்டர் சாவியை, ஐயப்பன் என்ற கல்லூரி மாணவனிடம் ராகவா லாரன்ஸ் ஒப்படைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறக்கட்டளையின் வாயிலாக உதவி செய்வது முழுக்க முழுக்க சேவை மட்டுமே என்றும், அரசியலுக்காக செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com