"குயின்" தொடருக்கு தடை கோரிய விவகாரம் : "வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை" - இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனு

'குயின்' இணையதள தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளார்.
"குயின்" தொடருக்கு தடை கோரிய விவகாரம் : "வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை" - இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனு
Published on

'குயின்' இணையதள தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளார். 'குயின், தலைவி' ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் தீபா, அவரை சந்திக்க முடியவில்லை என பலமுறை கூறியிருந்ததை சுட்டிகாட்டியுள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் விஜய் பதில் அளிக்க, கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, மார்ச் 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com