புஷ்பா-2 இயக்குநருக்கு வந்த சோதனை | Pushpa2
புஷ்பா-2 தயாரிப்பாளரை தொடர்ந்து, இயக்குநர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டிய நிலையில், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் செவ்வாயன்று சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, படத்தின் இயக்குநர் சுகுமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தயாரிப்பாளரின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வசூல் கணக்குகளை சரிபார்த்ததாக கூறப்படுகிறது.
Next Story
