திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். அப்போது தூங்கி வழிந்த குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு, பிரியா ஆனந்த் புகைப்படம் எடுத்து கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com