பிரசாந்துக்கு திருமணம் ?ஓபனாக பேசிய பிரசாந்த் தந்தை

பிரசாந்துக்கு திருமணம் ?ஓபனாக பேசிய பிரசாந்த் தந்தை
Published on

90களில் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்...

வைகாசி பொறந்தாச்சு படத்தில் திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், ஆணழகன், ஜீன்ஸ், ஜோடி, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனி இடம் பிடித்தார்..

அப்போதைய காலக்கட்டத்தில் ஹேன்ட்ஸம் ஹீரோவாக அறியப்பட்டவர்...விஜய், அஜித்துக்கு போட்டியாக உருவெடுத்தார்...

அவரின் பல காதல் படங்கள் இன்றளவும் ரசிக்கும் படியாக இருந்தாலும், சில படங்கள் அவருக்கு கைக்கொடுக்கவில்லை..

இச்சூழலில் 2005ல் கிரகலட்சுமி என்ற பெண்ணை தனது மகன் பிரசாந்திற்கு திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை தியாகராஜன்..

ஆனால் அந்த திருமணம் இரு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மனைவியை பிரிந்து பல மன உளைச்சலுக்கு ஆளானார் பிரசாந்த்....

இந்நிலையில் திரையுலகிலும் அவரது கம்பேக் படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த சூழலில் தான், அந்தகன் படம் பிரசாந்திற்கு அமைந்தது..

இந்தி ரீமேக் படமான அந்தகன், நல்ல வரவேற்பை பெற, அதற்கு வெற்றி விழா கொண்டாடி அழகு பார்த்தது படக்குழு..

இந்த விழாவில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியது ஹைலைட்டாக அமைந்தது...

பிரசாந்திற்கு எப்போ கல்யாணம் என போற போக்கில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டதும், உருக்கத்துடன் பேசத் தொடங்கிய தியாகராஜன், பட வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இனி மகனுக்கு பெண் தேடப் போவதாக தெரிவித்தார்..

இச்சம்பவம் விழா மேடையை மட்டுமன்றி பிரசாந்த் ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப்போது திருமணம் என இப்போதே இணையத்தில் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர் இணையவாசிகள்...

X

Thanthi TV
www.thanthitv.com