பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே' - ஏப்ரல் 3ல் வெளியீடு
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே' - ஏப்ரல் 3ல் வெளியீடு
Summary
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே' - ஏப்ரல் 3ல் வெளியீடு
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் மாதத்திற்கும், அதன்பின் காதலர் தின வெளியீடாகவும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய போஸ்டர் வெளியீட்டின் மூலம் படம் ஏப்ரல் மூன்றாம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது
பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது."
