இளசுகளின் கனவுக்கன்னி திடீர் மரணம்உயிரை குடித்த கொடிய நோய்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன?

x

32 வயதான பூனம் பாண்டே உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாடல் அழகியான இவர், அதீத கவர்ச்சியால் அறியப்பட்டாலும், அதை விட சர்ச்சைகள் மூலம் பிரபலமடைந்தார்.

2011ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி உலககோப்பை போட்டியில் வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என கூறி பலரின் எதிர்ப்பை சம்பாதித்தார். இதன் பின் திரைத்துறையில் கால் பதித்த பூனம் பாண்டே, லவ் இஸ் பாய்சன், மாலினி & கோ போன்ற கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் .

அமித் சக்சேனாவின் நாஷா என்ற படம் மூலம் 2013ல் பாலிவுட்டில் அறிமுகம் பெற்றாலும் வெள்ளித்திரையில் ஜொலிக்கவில்லை.

திரைப்படங்களை தவிர, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இறுதியாக ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான லாக் அப் சீசன் 1 இல் பங்கேற்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த பூனம் பாண்டே, கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்