நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி : தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ்

மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி : தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ்
Published on

நடிகை வனிதா விஜயகுமாரின் 2வது கணவர் அனந்தராஜன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அவர்களுக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உண்டு. தந்தை அனந்தராஜனின் பாதுகாப்பில் இருந்த ஜெனிதாவை, பள்ளியில் இருந்து, வனிதா கடத்தியதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதுமுதல், வனிதா தலைமறைவாக இருந்ததாக கூறும் அனந்தராஜன், தனியார் டிவி நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்றுள்ளது தெரிந்தவுடன், போலீசாருடன் தமிழகம் வந்ததாகவும் கூறினார். தெலுங்கானா போலீசாருடன் தமிழகம் வந்த அவர், நசரத்பேட்டை போலீசார் உதவியுடன், தனியார் டிவி நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்குள் சென்றுள்ளார். கடும் விவாதமும், விசாரணையும் நடைபெற்று வருகிறது. விரைவில், அவர் வனிதா விஜயகுமார் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com