'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேட்ட, விஸ்வாசம் படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

பொங்கல் திருநாளையொட்டி, வருகிற 10ம் தேதியன்று ரஜினி நடித்த 'பேட்ட' படமும், அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படமும் திரைக்கு வரவுள்ளன. இந்த படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடுவதை தடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

நீதிபதி சுந்தர் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, 'காப்புரிமை சட்டத்திற்கு முரணாக 3 ஆயிரத்து 710 இணையதளங்களில் படங்கள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக' வாதிடப்பட்டது.

அந்த இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த காலங்களில் இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com