பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"
Published on
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திர பாண்டி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கார் திரைப்படத்துக்கு வசூலித்ததை போல், ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர் ஆணையர்கள் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள், உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுக்கள் ஜனவரி 17 வரை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், ஜனவரி 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com