"பராசக்தி நாயகன்.." சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு

x

பராசக்தி படத்தோட இசை வெளியீட்டு விழாவ ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருக்க படக்குழு சிவாஜி கணேசன் குடும்பத்தை கௌரவிக்க முடிவு செஞ்சிருக்காங்க.....சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'.....1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து இப்படம் உருவாகி வருகிறது.டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிற இந்த படம் 2026 ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகைய முன்னிட்டு வெளியாகுது.பராசக்தி நாளே சிவாஜிதான் நியாபகம் வருவாரு.. அந்த வகைல படத்தலைப்பு பராசக்தி என்பதால சிவாஜி குடும்பத்தினர அழைத்து மேடையில கவுரவிக்க படக்குழு முடிவு செஞ்சிருக்காங்க...மேலும், சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால இதுவரை சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநர்கள அழைக்கிறதாவும் தகவல் வெளியாகியிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்