ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இன்ப அதிர்ச்சியை அறிவித்த சுதா கொங்கரா

x

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும், "தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி" ((THE WORLD OG PARASAKTHI)) கண்காட்சி, இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், இந்த படத்தில், பயன்படுத்திய பொருட்கள், வள்ளுவர் கோட்டத்தில் காட்சிபடுத்தப்பட்டது. தற்போது, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, இன்னும் சில நாட்களுக்கு கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்