வாய்விட்ட மோகன்.ஜி - அசிஸ்டன்டை விட்டு பதிலடி கொடுக்க வைத்த பா.ரஞ்சித்?

x

'BAD GIRL' படத்தின் டீசரை பகிர்ந்த பா. ரஞ்சித், படம் குறித்து புகழ்ந்து, தனது வாழ்த்தையும் பதிவு செய்திருந்தார். இதற்கு எக்ஸ் தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி, குறிப்பிட்ட சமூக பெண்களை மட்டும் இதுபோன்று காட்சிப்படுத்துவது ஏன் என்றும், உங்கள் சமூகப் பெண்களை வைத்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு, குடும்பத்திற்கு போட்டு காட்டுங்கள் என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பா. ரஞ்சித்தின் உதவி இயக்குர் குண்டல பாலகுருநாதம், சினிமாவின் பிரதான நோக்கமே, சமூக கலாச்சார விஷயங்களைக் எடுத்துக்கூறுவதுதான் என்றும், முதலில் எதையாவது படித்து அறிவை வளர்க்குமாறும் பதிலடி கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்