பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் - ஒரே வார்த்தையில் சொன்ன ஷாலினி

x

தனது கணவர் அஜித் விருது பெற்றதை பெருமையாக கருதுவதாக அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தெரிவித்துள்ளார். விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாலினி, குடியரசுத்தலைவர் மாளிகையில் அஜித் விருது பெற்றதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், தனது கணவர் விருது பெற்றது பெருமையாக இருந்ததாகவும், அனைவருக்கும் நன்றி எனவும் ஷாலினி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்