நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று "படையப்பா" ரீ-ரிலீஸ்

x
  • நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று "படையப்பா" ரீ-ரிலீஸ் , 1999ல் கே.ஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத கிளாசிக்காக கொண்டாடப்படும் படையப்பா படம், டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
  • ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற படமாக கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.. இது ஜப்பானில் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது... ரிலீஸை முன்னிட்டு டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் சிறப்பு பிரீமியர் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பு கல்கி 2898 ஏடி ப்ரமோஷன் போது ஜப்பான் ரசிகர்களை சந்திக்காத பிரபாஸ், இந்த முறை நேரடியாக ரசிகர்களை சந்திக்கிறார்.
  • "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக, லண்டனின் லீசெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா இயக்கிய "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" காதல் படம் 1995ல் வெளியானது. படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, லண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில் ராஜ்-சிம்ரனின் புகழ்பெற்ற சிக்னேச்சர் போஸ் கொண்ட வெண்கல சிலை திறக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவில் ஷாருக்கான் மற்றும் கஜோல் நேரில் பங்கேற்று, அந்த சிக்னேச்சர் போஸை மீண்டும் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" லீசெஸ்டர் சதுக்கத்தில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்