வெளிநாடுகளில் முன்பதிவு - வசூலை வாரி குவிக்கும் 'கூலி
வெளிநாடுகளில் முன்பதிவு - வசூலை குவிக்கும் 'கூலி'
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முன்பதிவிலேயே வசூல் சாதனையை படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, உபெந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பாடல்கள் வெளியாகி வைரலானதோடு, சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா மூலம் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கூலி படத்தின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் தொடங்கிய நிலையில், வெளிநாடுகளில் மட்டும் 15 கோடி ரூபாய்க்கு அதிகமாக கூலி படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ப்ரீ புக்கிங்கில் கூலி படம் மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் முன்பதிவு - வசூலை வாரி குவிக்கும் 'கூலி
