ஒண்ணா..ரெண்டா.. அனைத்து தடைகளையும் தாண்டி வெளியாகிறாள் BAD GIRL
பல்வேறு தடைகளை கடந்து BAD GIRL திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வர்ஷா பரத் உருவாக்கியுள்ள படம் பேட் கேர்ள் BAD GIRL .
வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில்,
படத்தின் டீசரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை மோசமாக காட்டியதாக விமர்சனங்கள் எதிர்ப்புகள் கிளம்பின.
படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார்.
சிறார் குறித்து ஆபாச காட்சி இருப்பதாக கூறி டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட டிரெய்லரை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
தற்போது, படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு மீண்டும் போஸ்டருடன் உறுதி செய்துள்ளது.
Next Story
