"ஒம் ரஜினிகாந்த்"... ரசிகைக்கு ஆட்டோகிராப் வழங்கிய ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகை ஒருவருக்கு ஆட்டோகிராப் வழங்கினார். பேத்தி காது குத்து விழாவுக்காக கோவை சென்ற நடிகர் ரஜினிகாந்த், பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். விமான நிலையம் வந்த அவருக்கு, ரசிகர்கள் ஏராளமானோர் புத்தகம், சால்வை வழங்கி வரவேற்றனர். பின்னர், ஆட்டோகிராப் கேட்ட ரசிகை ஒருவருக்கு, அவரது நோட்டில் ஒம் ரஜினிகாந்த் என கையெழுத்திட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com