ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தேரே இஷ்க் மே" படத்தின் "ஓ காதலே" பாடல் வெளியீடு
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை க்ரிதி சனோன் நடிக்கும் "தேரே இஷ்க் மே" படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "ஓ காதலே" பாடல் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் மற்றும் ஆதித்யா RK-வின் தனித்துவமான குரலில் உருவாகி இருக்கும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் ஆனந்த் L ராய் இயக்கும் இப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
Next Story
