Jayam Ravi | Kenish | Official-ஆக அறிவிப்பு - அட.. இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்க்கலயே

Official-ஆக அறிவிப்பு - அட.. இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்க்கலயே

இயக்குநராக ரவி மோகன் - இசையமைப்பாளராக கெனிஷா நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ஆன் ஆர்டினரி மேன் (An Ordinary Man) என்கிற திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது..

ரவி மோகன் கெனிஷா ஆகிய இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட நிலையில் இருவரும் தொழில்முறையாக இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரவி மோகன் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் கெனிஷா இசையமைக்க உள்ளார். 2024 ஆம் ஆண்டு முதலே ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. முதலில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இருவருக்குமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே கெனிஷாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றது மேலும் சர்ச்சையானது. சமீபத்தில் ரவிமோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவிக்க, ரவி மோகனும் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என வாழ்த்தினார். இந்நிலையில் தற்போது ரவி மோகன் - கெனிஷா இருவரும் தொழில் ரீதியாக இணைந்துள்ளனர். ரவி மோகன் இயக்கி தயாரிக்கும் ‘An Ordinary Man’ படத்திற்கு கெனிஷா இசையமைக்கிறார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு பட குழுவினர் இதனை உறுதி செய்துள்ளனர்.

#ravimohan #kenisha #film #direction #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com