OTT | Movie | "இனி 8 வாரம் காத்திருக்கணும்.." - தீர்மானம் எடுத்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
OTT | Movie | "இனி 8 வாரம் காத்திருக்கணும்.." - தீர்மானம் எடுத்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் #bengaluru #movie #ott #thanthitv இனிமேல் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் திரையரங்க சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். தற்போது பல திரைப்படங்கள் நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாகுவதால், திரையரங்க வசூல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், ஏப்ரல் 10 முதல் புதிய ஒப்பந்தங்களில் 8 வார இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
