நடிகை சர்ச்சையில் சிக்கி தப்பி ஓடிய.. GBU வில்லன் ஷைன் டாம் சாக்கோ எடுத்த முடிவு
கேரளாவில் தனியார் விடுதியில் நடந்த சோதனையின்போது தப்பியோடிய குட் பேட் அக்லி திரைப்பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, எர்ணாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகிறார். போதையில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தனியார் தங்கும் விடுதியில் போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தச் சென்றபோது, அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகின. விடுதியில் இருந்து தப்பியதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்க, கொச்சியில் உள்ள நடிகரின் வீட்டில் போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில், ஷைன் டாம் சாக்கோ ஆஜராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
