சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் - மதுரையில் 8 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்

மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 8 திரையரங்குகள் திரையரங்குகளுக்கு நோட்டீஸ்
சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் - மதுரையில் 8 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்
Published on

மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 8 திரையரங்குகள் மீது, நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த மகேந்திர பாண்டி, சர்கார் படத்திற்கு நீதிமன்ற உத்தரவை மீறி சில திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலித்ததாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com