நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டுவரும், தயாரிப்பாளர் அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவருமான, பைனான்சியர் அன்புச்செழியனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அன்புச்செழியன், யாருக்கு எவ்வளவு தேவையோ அந்தப் பட்ஜெட்டில் தான் படம் எடுக்க வேண்டும் எனவும் அப்போது தான் படத்தை நிம்மதியாக வெளியிட முடியும் என்றும் அறிவுரை கூறினார்.