'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பிப்.21ல் வெளியீடு
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ப்ரியா ப்ரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், முதலில் பிப்ரவரி ஏழாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
