புதிய பட ஷூட்டிங் நிறைவு.. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்த லெஜண்ட் சரவணன்!
லெஜண்ட் சரவணனின் புதிய பட ஷூட்டிங் நிறைவு - நலத்திட்ட உதவி
லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன், “தி லெஜண்ட்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக ‘கருடன்’ பட இயக்குநரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக, சரவணன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடித்துள்ளார்.
Next Story
