SivaKarthikeyen | Cinema | புது அவதாரம்.. சங்கத்தில் அதிகாரபூர்வமாக சேர்ந்தார் SK

புது அவதாரம்.. சங்கத்தில் அதிகாரபூர்வமாக சேர்ந்தார் SK

SivaKarthikeyen | Cinema | புது அவதாரம்.. சங்கத்தில் அதிகாரபூர்வமாக சேர்ந்தார் SK #Sivakarthikeyan #SK #Kollywood நடிகர் சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். மரியாதை நிமித்தமாகவும், சங்கம் நடத்தும் விழாவில் பங்கேற்பது தொடர்பாகவும், சங்கத் தலைவர் சேரன், பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிவகார்த்திகேயனை சந்தித்தனர். சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கம் நடத்தும் விழாவில் பங்கேற்பதாகவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக சங்கத்தில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com