"எனக்கு நேர்ந்தது மிகக் குறைவானது; நயன்தாரா, திரிஷா கூறினால் அதிகம் தெரியும்" - நடிகை ஸ்ரீரெட்டி

திரைத்துறையினர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளின் பெயர்களையும் கூறியுள்ளார்.
"எனக்கு நேர்ந்தது மிகக் குறைவானது; நயன்தாரா, திரிஷா கூறினால் அதிகம் தெரியும்" - நடிகை ஸ்ரீரெட்டி
Published on

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த ஒரு வரமாக தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களையும் கூறி வருகிறார். ஏற்கனவே, இயக்குநர்கள் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயர்களை கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, தனக்கு மட்டும் தான் இதுபோன்று நடந்ததாக பலரும் நினைப்பதாகவும் தனக்கு நேர்ந்தது மிகவும் சிறியது எனவும் குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளும் வெளியே சொல்ல ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக தெரியும் எனவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com