திரைத்துறையில் 49வது ஆண்டு - ராதிகாவை கொண்டாடிய நயன்தாரா

திரைத்துறையில் 49வது ஆண்டு - ராதிகாவை கொண்டாடிய நயன்தாரா
Summary

திரைத்துறையில் 49வது ஆண்டு - ராதிகாவை கொண்டாடிய நயன்தாரா

சினிமா துறையில் 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராதிகாவை கொண்டும் விதமாக அவருக்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் , நடிகை நயன்தாரா

நடிகை ராதிகா சரத்குமார் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "HI" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்காக சிறப்பு கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அதனை நடிகை ராதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர் நடிகை நயன்தாரா என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதற்காக நயன்தாரா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை ராதிகா, தன்னுடைய வாழ்க்கையில் கிடைக்கும் உண்மையான வெற்றி என்பது தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு தான் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாய்கிழவி' படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது"""

X

Thanthi TV
www.thanthitv.com