National Film Award| வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்லிக்கு வெளியே..? -இதெல்லாம் ரொம்பவே அபூர்வம் தான்

வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்லிக்கு வெளியே..? -இதெல்லாம் ரொம்பவே அபூர்வம் தான்

வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்லிக்கு வெளியே..? - இதெல்லாம் ரொம்பவே அபூர்வம் தான்

டெல்லிக்கு வெளியே முதன்முறையாக தேசிய திரைப்பட விருதுகள் விழா? ​இந்திய திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் விழா, வரலாற்றில் முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ​

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தின் ஏக்தா நகரில் (Ekta) உள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியில் குஜராத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த விழாவில் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்குவார் என தெரிகிறது. வழக்கமாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த விழா, முதன்முறையாக வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

#72thnationalfilmawards #delhi #film #gujarat #awards #thanthi

X

Thanthi TV
www.thanthitv.com