"ஜாட்" திரைப்படத்தை தடை செய்யக்கோரி நாதகவினர் போராட்டம்

x

"ஜாட்" திரைப்படத்தை தடை செய்யக் கோரி மதுரையில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படம் விடுதலை புலிகள் இயக்கத்தை கொச்சைப்படுத்தி, போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மால் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்