நரகாசூரனுக்கு 'யு/ஏ' சான்றிதழ்

துருவங்கள் பதினாறு மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த கார்த்திக் நரேனின் அடுத்த படைப்பு 'நரகாசூரன்'
நரகாசூரனுக்கு 'யு/ஏ' சான்றிதழ்
Published on

துருவங்கள் பதினாறு மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த கார்த்திக் நரேனின் அடுத்த படைப்பு 'நரகாசூரன்'. இதில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஷ்ரியா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரான் ஈதன் யோகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது தணிக்கை குழு நரகாசூரனுக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 110 நிமிடங்கள் என்றும் விரைவில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com