`மகிழ்ச்சியான தருணம்'' - மலேசிய பிரதமரை நேரில் சந்தித்த இளையராஜா

x

மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள இசைஞானி இளையராஜா அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.

இது தொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இந்திய இசையின் ஜாம்பவான் இளையராஜாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் எனத் தெரிவித்தார். மேலும், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலை மற்றும் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்