`உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்..'' - மநீம கமல் பாராட்டு

x

தமிழக முதல்வர் ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தவர் என, நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி, கலைக்களம் என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சிகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசிய போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடின உழைப்பால் உயர்ந்ததாகவும், மேலும், தமிழகம் பல துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்