படப்பிடிப்பில் அத்துமீறல்.. நடிகையிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
படப்பிடிப்பில் சில்மிஷம் செய்ததாக நடிகை புகார் கூறிய நிலையில், அவரிடம் மலையாள முன்னணி நடிகர் ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஷைன் டாம் சாக்கோ தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சூத்ரவாக்கியம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகை குற்றஞ்சாட்டி இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொச்சியில் நடந்த சூத்ரவாக்கியம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சாக்கோ, நடிகையிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக கூறினார்..
Next Story
