ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மீனா - வெளியான பகீர்
மறைந்த நடிகை சௌந்தர்யாவுடன் தானும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டி இருந்தது, ஆனால் சூல்நிலை காரணமாக தவிர்த்து விட்டேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2004-ஆம் ஆண்டு, ஹெலிகாப்டர் விபத்தில் நடிகை சௌந்தர்யா உயிரிழந்தது, இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மீனா, தானும் செளந்தர்யாவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டி இருந்தது எனவும், படப்பிடிப்பு இருந்ததால் தவிர்த்து விட்டேன் எனவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
