Marvel | Hollywood | Nicolas Cage | மார்வல் யூனிவர்ஸ்ஸில் இணையும் நிக்கோலஸ் கேஜ்
ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் நடிப்புல அடுத்த வருசம் வெளியாக இருக்க ஸ்பைடர் நோயர் 'Spider-Noir' என்ற வெப் சீரிஸின் போஸ்டர Amazon Prime அதிகாரப்பூர்வமா வெளியிட்டுருக்காங்க.
மேலும், இந்த சீரிஸ் black and white மற்றும் கலர்ன்னு ரெண்டு விதத்துல ரிலீஸ் ஆகப்போறதா உறுதி செஞ்சுருக்காங்க.
'Face-off', 'Ghost Rider', 'National Treasure' போன்ற படங்கள் மூலியமா உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ், மார்வல் யூனிவர்ஸ்ல 'Spider-Man Noir'-ஆ வரப்போராரு. இந்த தொடர்ல, நடிகர் நிக்கோலஸ் கேஜ் 1930-கள்ல இருக்குற, டிடெக்டிவ் தொழில்ல கஷ்டப்பட்ர ஒரு வயது முதிர்ந்த சூப்பர் ஹீரோவான Ben Reilly கதாபாத்திரத்துல நடிக்கிறாரு.
Amazon Prime வெளியிட்டுள்ள போஸ்டர்ல, ஒரு கதவுக்கு பின்னாடி டிடெக்டிவ் உடையில இருக்குர Spider-Noir லுக், மார்வல் ரசிகர்கள் மத்தியில மிகுந்த எதிர்பார்ப்ப உருவாக்கியிருக்கு.
