ஊழியர்களுடன் சரிசமமாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட மம்மூட்டி... இணையத்தில் வைரலாகும் வீடியோ

மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்தது. இதையடுத்து படபிடிப்பில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. அனைவருக்கும் பிரியாணி பரிமாறிய நடிகர் மம்முட்டி அவர்களுடன் தாமும் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிரியாணி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com