தெய்யம் நடனத்தை புகழ்ந்த மாளவிகா மோகனன்
என்னோட குழந்தை பருவத்துல இருந்து இந்த தெய்யம், மிகவும் ஸ்பெஷல்னு நெகிழ்ந்திருக்காங்க நடிகை மாளவிகா மோகனன்..
கேரள பொண்ணான மாளவிகா, தெய்யம் நடனம், எனக்கு ரொம்ப ஸ்பெஷல்னும், இது நம்மோட முன்னோர்களை பத்தியும், அவங்களோட வீரம், ஆன்மிகத்தை பத்தியும் அழகா எடுத்து சொல்வதாகவும் புகழ்ந்திருக்காங்க..
விசுவலா ரொம்ப அழகா இருக்க இந்த தெய்யம் நடனம், எங்களோட அடையாளம், வரலாறு, நம்பிக்கைனு பெருமையா சொல்லி, அதோட வீடியோஸை மாளவிகா ஷேர் பண்ணியிருக்காங்க...
நாளுக்கு நாள் உலகம் மாறிட்டு வர காலக்கட்டத்துல, இதுபோன்ற கலைதான், நம்மள நம்மோட வரலாற்றோட இணைச்சி வைப்பதாகவும் மாளவிகா பதிவிட்டிருக்காங்க...
Next Story
