மகாமுனி முக்கியமான படமாக அமையும் - நடிகர் ஆர்யா

மகாமுனி திரைப்படம் தமது திரைப்பட வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

மகாமுனி திரைப்படம் தமது திரைப்பட வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். மெளனகுரு திரைப்பட இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாமுனி திரைப்படம் வரும் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது. அண்மையில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான காட்சி ஒன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகாமுனி படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ஆர்யா, அதிக இடைவெளியின்றி சாந்தகுமார் படங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற கதாபாத்திரத்தை தமக்கு வழங்கிய இயக்குனர் சாந்தகுமாருக்கு நன்றி என்றும் ஆர்யா தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com