"பிஞ்சிலே பழுத்தது போல் குழந்தைகள் பேசுறாங்க.." - நடிகர் மாதவன்
சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக சிறு குழந்தைகள் பிஞ்சிலே பழுத்தது போல் பேசுவதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்த வகை செய்யும் பிரத்யேக செயலியின் அறிமுக மற்றும் தொடக்க விழாவில் நடிகர் மாதவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், முதலீட்டாளராகவும், நிறுவனத்தின் பங்குதாரராகவும் இந்த முயற்சியில் தான் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறு குழந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story
