Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிர்பாராத புதிய ஷாக்

x

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உணவக டெண்டரை மாதம்பட்டி ரங்கராஜ் முறைகேடாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்த புகாரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணதாசன், முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ளார். அந்த புகாரில், டெண்டருக்கு விண்ணப்பிப்பவர்கள் 120 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவிலான ஹோட்டலை குறைந்தது ஐந்து வருடங்கள் நடத்தியிருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜிடம் அதுபோன்ற ஹோட்டல் இல்லை. இந்நிலையில் எப்படி அவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்