``அங்கேயும் RSS ஆதிக்கம்’’ - எம்.ஏ. பேபி காட்டம்

x

இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எம்.ஏ.பேபி பேசியபோது, இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம் என சூளூரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், திரைப்பட தணிக்கை வாரியத்திலும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் அதிகமாக உள்ளதால் திரைத் துறையிலும் கருத்து சுதந்திரம் பாஜகவால் பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்