பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு?
Published on

நடிகர் சஞ்சய் தத் கடந்த 8ஆம் தேதி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக சில காலம் தமது பணியில் இருந்து விலக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் தன்னுடன் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நான் விரைவில் மீண்டு வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர் நுரையீரல் புற்றுநோயின் 3ஆம் கட்ட நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும் என சினிமா பிரபலங்களும் அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com