Lokesh kanagaraj | Rajini | Kamal | லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைவது உறுதியானது

x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைவது உறுதியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 46 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைய போவதை நடிகர் கமலஹாசனே உறுதிப்படுத்தி உள்ளார். துபாயில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் சதீஷ், நடிகர் கமல்ஹாசனிடம் 46 வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான சம்பவம் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம் அது உண்மையா என கேள்வி எழுப்பினார். அதற்கு தரமான சம்பவமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும் என நகைச்சுவையாக பதிலளித்த கமல்ஹாசன், நாங்கள் மீண்டும் சேர்ந்து வர உள்ளோம் என தானும், ரஜினிகாந்தும் இணைய போவதை உறுதிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்