Lokesh Kanagaraj| தவறை ஒப்புக்கொண்ட லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj| தவறை ஒப்புக்கொண்ட லோகேஷ் கனகராஜ்

'லியோ', 'கூலி' தவறுகள் குறித்து மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் இயக்குனராக முத்திரை பதித்து, தற்போது 'டிசி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், தன் மீதான விமர்சனங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.. ​சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், "என் அம்மாவே அந்த ட்ரோல்களை எனக்கு அனுப்புகிறார், இதில் பதற்றமடைய எதுவும் இல்லை. நமது வேலை சிறப்பாக இருந்தால் மக்கள் பாராட்டுவார்கள், அதில் தவறு இருந்தால் ட்ரோல் செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார். ​மேலும், "எனது முந்தைய படங்களான 'லியோ' மற்றும் 'கூலி' ஆகியவற்றில் சில குறைகள் இருந்ததால்தான் இந்த விமர்சனங்கள் வந்தன" என ஒப்புக் கொண்ட லோகேஷ், அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து பணியாற்றும் 'AA23' படம் வெளியாகும் போது இந்த ட்ரோல்கள் அனைத்தும் தானாகவே நின்றுவிடும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com