`லியோ' பட பாடல் சர்ச்சை - "அவர் Resign பண்ணனும்.."

x

தினேஷ் மாஸ்டர் மீது புகார் - வாக்குவாதம் -

சென்னையில் நடன இயக்குநர்கள் சங்கத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தில் ஏராளமான டான்சர்ஸை வைத்து பிரமாண்டமாக படமாக்கப்பட்ட நான் ரெடிதான் பாடல் செம்ம வைரலானது.

இந்த பாடலில் டான்சர்ஸ்க்கு உரிய சம்பளம் தராமல், டான்ஸ் மாஸ்டரும், நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவருமான தினேஷ் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதோடு, நடன இயக்குநர் மாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறிய டான்ஸ் மாஸ்டர் கௌரி சங்கரை தினேஷ் தாக்கியதாக சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், தொடர் புகார் எதிரொலியாக தினேஷை பதவி விலகக்கோரி சங்கத்தின் துணை தலைவரான கல்யாண் வலியுறுத்திய நிலையில், சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் கூடியது.

அப்போது, நடன கலைஞர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

பொதுக்குழு கூடுவதற்கு முன் தான் ராஜினாமா செய்வதாக கூறிய தினேஷ், பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் ராஜினாமா செய்ய மறுத்ததாக கல்யாண் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து தினேஷை கண்டித்து கல்யாண் தரப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்